Donations

தன்னார்வலர்களுக்கான அன்பான வேண்டுகோள்...

நலிவடைந்தோர் ஒவ்வொருவர் வாழ்வும் உங்களால் சிறக்கட்டும்.‌

    எங்கள் அறக்கட்டளையின் ஏழை மற்றும் ஆதரவற்ற‌ முதியோர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரின் தினசரி அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை மற்றும் இதர பொருளுதவுகள் அனைத்தும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

உங்களால் இயன்ற உதவி எதுவாயினும் முன்வந்து செய்து தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

– அன்னதான மளிகை பொருட்கள்
– மாற்றுத்திறனாளிகளுக்கான ஊக்க பொருட்கள்
– உடைகள்
– மருத்துவ உதவி
– இருப்பிட‌ சீரமைப்பு உதவிகள்
– தன்னார்வத் தொண்டுகள்

உதவிகள் பொருளாகவோ, பணமாகவோ எங்களை வந்தடைய உதவுமாறு,

ஸ்ரீ காமதேனு செட்டிநாடு அறக்கட்டளை சார்பில் கேட்டு கொள்கிறோம்.

Raise Your Prestigious Fund by,

Kamadhenu Chettinadu Charitable Trust State Bank of India, Sekkalai, Karaikudi
A/c No.00000041309084884
IFSC No.0070865

நன்கொடை வேண்டுகோள் எண் 1

    எங்களுடைய அறக்கட்டளைக்காக ஏழை ஊனமுற்ற அல்லது ஏழை முதியவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 750க்கு ரேஷனில் கொடுக்காத மளிகை சாமான்களை அவர்கள் வீட்டில் கொண்டு போய் கொடுக்க மாதம் 850 ரூபாயாக அல்லது வருடம் 10,000/= ரூபாயாக நன்கொடையாக தந்துவிட பணிவாக வேண்டுகிறோம்.

நீங்கள் விரும்புகிற காலத்திற்கும் கொடுக்கலாம்

Kamadhenu Chettinadu Charitable Trust State Bank of India, Sekkalai, Karaikudi
A/c No.00000041309084884
IFSC No.0070865

நன்கொடை வேண்டுகோள் எண் 2

    எங்களுடைய அறக்கட்டளைக்காக ஏழை ஊனமுற்ற அல்லது ஏழை முதியவர்களை சாதாரண மருத்துவ சேவைக்காக மருத்துவ மனைகளுக்கு கூட்டிபோய்வர மாதம் ரூபாய் 250ஆக அல்லது வருடம் ரூபாய் 3,000/- தந்துவிட பணிவாக வேண்டுகிறோம்.

Kamadhenu Chettinadu Charitable Trust State Bank of India, Sekkalai, Karaikudi
A/c No.00000041309084884
IFSC No.0070865

நன்கொடை வேண்டுகோள் எண் 3

    எங்களுடைய அறக்கட்டளைக்காக ஏழை பள்ளிப்பிள்ளைகளுக்கு பள்ளி பஸ் கட்டணம் அவர்களுக்கு இலவசமாக கிடைக்காத புத்தகங்கள் பென்சில்களை கொடுத்துதவ ரூபாய் 425ஆக அல்லது வருடம் ரூபாய் 5,000/- ஆக தந்துவிட பணிவாக வேண்டுகிறோம்.

Kamadhenu Chettinadu Charitable Trust State Bank of India, Sekkalai, Karaikudi
A/c No.00000041309084884
IFSC No.0070865

நன்கொடை வேண்டுகோள் எண் 5

    மருத்துவமனைக்கு அவர்களை கூட்டிபோய் உணவுப்பொருட்களை கொண்டு போய் கொடுக்கவும் வாகனங்கள் வாங்க, அலுவலகம் அமைக்கவும், பணியாட்கள் சம்பளம் மற்றும் செலவுகளுக்கும் பணம் தேவை. அன்புள்ளம் கொண்ட நல்லோர்களே தந்துவிட பணிவாக வேண்டுகிறோம்.

Kamadhenu Chettinadu Charitable Trust State Bank of India, Sekkalai, Karaikudi
A/c No.00000041309084884
IFSC No.0070865

நன்கொடை வேண்டுகோள் எண் 4

    எங்களுடைய அறக்கட்டளைக்காக வரும் ஏழைகளுக்கும், உதவி தரும் விருந்தினர்களுக்கும், வேலை செய்தவர்களுக்கும், உணவு விற்பனை செய்து அறக்கட்டளைக்காக கொஞ்சம் பொருளீட்டவும் நல்ல தரமான அடுப்படியை தேவையான பொருட்களோடு அமைக்க பணமாக அ‌ல்லது பொருளாகவோ தந்துவிட பணிவாக வேண்டுகிறோம். Gas அடுப்புகள், குக்கரகள், ஆவன்கள், மிக்சி, கிரைன்டர், மின்சார குக்கர். குளிர்சாதன பெட்டி, ஹாட்பாட்டுகள், அடுப்பில் வைக்கும் பாத்திரங்கள், பல வகை எவர்சில்வர் பாத்திரங்களும் தேவை. பொருட்களை காரைக்குடி கடைகளில் வாங்கிக்கொள்ள ஏற்பாடும் செய்யலாம். இருகரம் கூப்பி வேண்டுகிறோம்.

Kamadhenu Chettinadu Charitable Trust State Bank of India, Sekkalai, Karaikudi
A/c No.00000041309084884
IFSC No.0070865

நன்கொடை வேண்டுகோள் எண் 6

அன்புள்ளம் கொண்ட நல்லவர்களே வல்லவர்களே தர்மம் செய்யுங்ச அதை தள்ளிப்போடாதீர்கள் இன்றே செய்யுங்கள் இயன்ற செய்யுங்கள் தினம் ஒரு ரூபாயாக எங்களுடைய தரும காரியங்களுக்காக தந்து உதவுங்கள் உங்களிடம் கையேந்தி நிற்கிறோம் கருணை காட்டுங்கள்.இவ்வாண்டிலிருது ஆண்டிற்கு ரூபாய் 365 ஆக தானமாக தந்துவிட வேண்டுகிறோம். உங்க வசதிக்கேற்ப உங்க வீட்டுல ஒவ்வொருக்குமோ அல்லது ஒருசிலருக்கோ செய்யலாமே வணக்கம்
காமதேனு.

தயவு செய்து தங்க குடும்பத்தில் எல்லாருடைய பறந்த நாள் நட்சத்திரம் ராசியை தெரிவிக்க வேண்டுகின்றேன்.

Kamadhenu Chettinadu Charitable Trust State Bank of India, Sekkalai, Karaikudi
A/c No.00000041309084884
IFSC No.0070865

மேலே குறிப்பிட்ட செய்தியை நல்லாருக்கும் அனுப்பி உதவுங்க.

நமது முதல் திட்டம் – ஏழைக் குழந்தைகள் – ஊனமுற்ற குழந்தைகள் கல்வி உணவு உடை பள்ளி பஸ் வசதிகளை பெற்றவர்களுடன் இருந்த படியே உதவி செய்தல்

ஏழை உதவியற்ற முதியவர்களுக்கும் வீட்டிலிருந்தபடியே உதவி செய்தல்

இந்த வேலைகளை செய்ய வாகனங்கள் வாங்கி தொண்டர்கள் வேலை ஆட்களை ஏற்பா டு செய்தல்.

ஊனமுற்றவர்கள் முதியவர்கள் ஏழைகளுக்கு முறையாக வைத்திய உதவிகளை பெற மருத்துவமனைக்கு கூட்டிபோய்வருதல்.

இந்த வசதிகளை செய்ய தொண்டர்கள் பணியாட்கள் தங்க இட வசதிகளும் செய்ய வேண்டும்.

இந்த பணி தொடங்கிய பிறகு இந்த சேவைகள் தேவையான மக்கள நம்மை தேடி வந்துகிட்டு இருப்பார்கள்.

இந்த பணிகளை நல்ல முறையில் செய்ய கருணை மனம் கொண்ட வள்ளல் பெருமக்களே வந்து உதவுங்கள் பணமாக பொருளாக தந்து உதவுஙகள்.

தினம் ஒரு ரூபாய் திட்டத்திலும் வந்து சேருங்கள் உங்கள் நண்பர்கள் உறவினர்களையும் சேர்த்துவிடுங்கள்.

எங்கள் காமதேனு கேட்பதெல்லாம் கொடுப்பாள். கேளுங்கள் கிடைக்கும்.

நீங்கள் பணமாக தரும்
எல்லா உதவிகளையும் அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளில் மட்டுமே செலுத்த வேண்டும். நீங்கள் தரும் பொருட்களுக்கும் ரசீதுகள் WhatsApp/ online மூலம் அனுப்பப்படும்.

இருகரம் கூப்பி வணங்கி வாருங்கள் உதவுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் அன்னை காமதேனு உங்களுக்கு வரங்களையும் வாரி வழங்குவாளக.

நன்றி வணக்கம்.

காமதேனு செட்டிநாடு சமூக சேவை அறக்கட்டளை.

எங்கள் அறக்கட்டளை காரைக்குடி சப் ரிஜிஸ்டர் ஆபீசுல பதிவு செய்யப் பட்டது இன்கம் டாக்ஸ் பதிவு செய்து பேன் கார்டு வைத்துள்ளது.

Kamadhenu Chettinadu Charitable Trust State Bank of India, Sekkalai, Karaikudi
A/c No.00000041309084884
IFSC No.0070865

கருணை உள்ளம் கொண்ட நல்ல வள்ளல்களே உங்களை கைகூப்பி வணங்கி எங்களுடைய தருமத் திட்டங்களுக்காக பணமாகவோ பொருட்களாகவோ தந்து உதவும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

திட்டம் 1: அன்னதானம் – ஏழை ஊனமுற்றவர் மற்றும் ஏழை முதியோர் வீடுகளுக்கு போய் மாதாமாதம் ரூ750 மதிப்புள்ள மளிகை பொருள் வழங்குதல் – முதலில் பத்துக் குடும்பங்களுக்கு – செலவு உள்பட மாதம் ரூ850 ஆகலாம்.
*இத்திட்டம் பெறப்படும் நன்கொடைகளுக்கு ஏற்ப விரிவுப்படுத்தப்படும்.

திட்டம் 2: ஊனமுற்ற ஏழைகளின் குழந்தைகளுக்கு படிப்பிற்கு பொருள் உதவிகள் செய்தல் – தேவைக்கேற்ப பிள்ளைக்கு மாதம் ரூ750 வரை.

திட்டம் 3: ஏழை ஊனமுற்றவர்கள் மற்றும் முதியவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று வரும் சேவை- இந்த திட்டம் தொடங்க வாகனங்கள் வாங்க அவைகளை ஓட்டவும் பண உதவிகள் தேவை.
*உதவிகள் கிடைத்ததும் இத்திட்டம் தொடங்கும்

திட்டம் 4:  சுமாராக 3 ஏக்கரில் ஏழை ஊனமுற்றவர்கள் அவர்களுடைய குடும்பத்தில் உதவிபெறத் தகுதியானவர்கள், ஏழை ஆதரவில்லாத முதியவர்களுக்கும் ஒரு நல்ல விடுதி உதவிகள் பெற்று அமைத்தல். சுமாராக 3 ஏக்கரில் ஏழை ஊனமுற்றவர்கள் அவர்களுடைய குடும்பத்தில் உதவிபெறத் தகுதியானவர்கள், ஏழை ஆதரவில்லாத முதியவர்களுக்கும் ஒரு நல்ல விடுதி உதவிகள் பெற்று அமைத்தல்.

திட்டம் 7: ஊனமுற்றவர்களுக்கு உதவத்தகுந்த தொழில்களைத் துவக்க உதவுமாறு கருணை உள்ளம் கொண்ட உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட பெரிய எல்லாத்திட்டங்களையும் பாதயாத்ரீகர்கள் அதிகம் செல்லும் வழியில் அமைத்துத்தர காமதேனுவை பிரார்த்திக்கிறோம். மொத்தம் சுமாராக 12 ஏக்கருக்கும் குறையாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

திட்டம் 5: சுமாராக 4 ஏக்கரில்
காமதேனு திருக்கோயில் சகல தெய்வ சந்நிதானங்களுடனும், நல்ல நந்தவனத்துடனும், சிரிய அழகிய பசுமடத்துடனும், கூட்டுப் பிரார்த்தனைகளுக்கும் பொருத்தமான மண்டபத்துடனும், வள்ளலார் திருமிகு அணையா அடுப்படன் அன்னதானக் கூடமும், ஒரு விழா (கல்யாண) மண்டமும், கோபூசை விழா அரங்குடன் நிதி உதவி பெற்றும் அமைக்க அருள்புரிய காமதேனுவை வேண்டுகிறோம்.

திட்டம் 6: செட்டி நாட்டுப் பகுதி இன்னும் மிகச் சிறந்த சுற்றுலாப் பகுதியாக மாறும் வண்ணமும், எங்களுடைய அறக்கட்டளைக்கு பொருளாதார வளம் பெறவும் மிகப்பெரிய சுமார் 115 அடி உயரமான செல்வங்களை வாரிவழங்கும் விசுவரூப தனலெட்சுமி திருக்கோயிலை காமதேனு கோயிலையொட்டி சுமார் 5 ஏக்கரில் அமைத்துத்தர தனலட்சுமியை வேண்டுகிறோம். இந்தக் கோயில்களுக்கு வரும் பக்தர் தங்கி வழிபடவும், இதன் வழியாகச்செல்லும் யாத்ரீகர்கள் ஓய்வெடுத்துக் செல்ல வசதியாக கழிவறை குளியலறைக்களுடன் நல்ல சத்திரமும் கட்டித்தர உதவ வகைசெய்ய காமதேனுவைப் பிரார்த்திக்கிறோம்.

சுமார் 300 யாத்ரீகர்கள் தங்க அறை வசதகளுடன் கூடிய விடுதியை கட்டித்தர அன்னையை வேண்டுகிறோம்.

திட்டம் 9: ( 8 தவிர்க்கப்பட்டது): சுமாராக 50 – 100 ஏக்கரில் செட்டி நாட்டுப்புறப் பகுதியில் சுமாராக 810க்கும் குறையாத சிறந்த நாட்டுப்பசுக்கள் – காரம்பசு, மயிலை, செர்ச்சி என்ன சொல்லப்படுகின்ற சிறந்த பசுக்களும், மேலும் அதற்குரிய கன்றுகளும், காளைகளும் சேரவும், மற்றும் இந்தப்பகுதியில் வெட்டுக்களைத் தவிர்க்க பால்கரக்காத பசுக்களையும், காளைக்கன்றுகளையும் நம் அறக்கட்டளை ஏற்று(சும்மா உதவியாக எடுத்துக்கொண்டோ அல்லது விலை கொடுத்து வாங்கியோ) அவைகளையும் வைத்து மிக அன்பாக காத்து வளர்ப்பது. அனைத்தையும் சேர்த்து சுமாராக 2 ஆயிரம் மாடுகள்வரை சிறந்த முறையில் வளர்க்க நல்ல பசுமடத்தை (கோசாலை) அமைத்துத் தர காமதேனுவை பிரார்த்திக்கிறோம். கன்றுகளுக்கு நியாயமான அளவு பால் குடிக்கக் கொடுத்துத்தான் பால் கறக்கப்படும். நம்முடைய கோசாலை மாடுகள் மிகவும் நல்லமுறையில் ஆயுட்காலம்வரை பார்க்கக்கூடிய கோசாலைகளுக்கு கொடுப்பதைத் தவிர நம் கோசாலையிலேயே எல்லா மாடுகளும் ஆயுட்காலம்வரை காத்து அதன்பிறகு கோசாலையிலேயே அதற்கான சிறப்பாக அமைக்கப்பட்ட இடத்தில் முறையாக அடக்கம் செய்யப்படும்.

முதலிலே இடம் வாங்க வேண்டும். கோதானங்கள் வழி பசுக்கள் பெறுதல், பசுக்களுக்கான உணவு மற்றும் எல்லாவிதமான தானங்களும் பெறுவோம்.

மற்றும் முதலாவதாக செட்டி நாடு பகுதியில் இன மத சார்பின்றி எல்லாவகையான நல்ல சேவைகளையும் செய்ய காமதேனுவை பிரார்த்திக்கின்றேன்.

மலேசிய பத்துமலை முருகன், சேலம் விசுவரூப தனலெட்சுமி, முத்துமலை முருகன் திருவடிவங்களையும் வடிவமைத்த, இப்பொழுது உலகின் மிகப்பெரிய நந்தியெம்பெருமானை சேலம் அருகில் வடிவமைத்துக்கொண்டிருக்கிற உலகப் புகழ்பெற்ற சிற்பி திருவாரூர் திரு தியாகராஜன் அமைக்கக் கண்டுள்ள எங்கள் ஆசையை நிறைவேற்றித்தர பிரார்த்திக்கிறோம்.

மேற்கண்ட அனைத்து திட்டங்களும் பெறப்படும் நன்கொடைகளுக்கு ஏற்ப விரிவுப்படுத்தப்படும்

இயலாதோர்களுக்கு மளிகை உதவித் திட்டம்

தொடக்க விழா அழைப்பு

கருணை உள்ளம் கொண்டோர்களே

வணக்கம் வாழ்க வளமுடன்

ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும் ரூ750க்கு உரிய மளிகை சாமான்களை மாதாமாதம் வீட்டில் போய் கொடுத்து உதவும் திட்டம் 12.4.2023ல் உங்க உதவியுடன் காமதேனு அருளால் ஆரம்பமாகியது. புகழ்பெற்ற நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவி இந்நிகழ்வை படமாக்கி உலகிற்கே வழங்க வருகிறார்கள்.
எல்லோரும் வந்து உதிவி சிறப்பிக்க இரு கைகூப்பி வணங்கிக் கேட்டுக்கொள்கிறோம்
நன்றி.
மதியம் மூன்று மணிக்கு நிகழ்வு தொடங்கி மாலை ஏழு மணிக்கு முடியும்.
காப்பி சிற்றுண்டி வழங்கப்படும்.
வணக்கம்

இடம்: 66, Seen maena Veethii, Karaikudi.

Kamadhenu Chettinadu Charitable Trust State Bank of India, Sekkalai, Karaikudi
A/c No.00000041309084884
IFSC No.0070865

எங்கள் அறக்கட்டளை இயலாதவர் மளிகை வழங்கும் தொடக்க விழாவில் கோடிக்கணக்கில் நமசிவாய மந்திரம் ஓதி எழுதி உய்யும் தொடக்க விழாவும் நடைபெறும். நீங்களும் இந்த திருமந்திரம் எழுதும் இயக்கத்தில் சேர்ந்து எழுதியும், எழுதக்கூடிய நல்லவர்களுக்கு எங்கள் அறக்கட்டளையின் இந்த திருமந்ரம் எழுதும் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தும் இறையருள் பெறுவீர்களாக! 5,000 முறை எழுதும் புத்தகம் ரூபாய் 30 தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
முதல் ஒரு கோடி மந்திரம் 2023 ஆகஸ்ட் 9ம் தேதிக்குள் எழுதமுடிக்கவும், 16,8.2023 ம் தேதி அதற்காக சிறப்பாக வழிபாடு செய்யவும் அருள்புரிய ஈசனிடம் வேண்டுகிறோம்.
வாங்க நமசிவாய எழுதுங்க நலம் பெறுங்க

இறைவன் திருநாமத்தை திருநீறு பூசி கோடி முறை எழுதுவதால் நம் பல நாள் நடக்காத வேண்டுதல்கள் நிறைவேறும்.
அது மட்டும் அல்லாமல் இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை சேர்க்கும் திருநாமம் நிச்சயமாக உடனே மன நிம்மதி தரும் எள்பது திண்ணம்.

இந்த திருநாம யாகத்தை நாம் அனைவரும் ஒன்று சேர அவரவர் இல்லத்தில் இருந்தபடியே ஒருங்கிணைந்து செய்வதால் இது உலகத்திற்கே பெரும் நன்மையும் நம் வீடு தோறும் எல்லா செல்வத்தையும் கொண்டு வந்து சேர்க்கும் என்பது உறுதி்.

இந்த நாம வேள்வியானது வரும் பங்குனி 18 (1/4/2023) அன்று தொடங்கி ஆடி பெருக்கன்று (3/8/2023)இனிதே நிறைவு செய்ய உள்ளோம். இத்தினத்தன்று இந்த கோடிநாம வேள்வியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களின் பெயரும் காமதேனுவுக்கு நடைபெற இருக்கும் கோடி நாம அர்ச்சனையில் சேர்க்கப்படும் என்பது இந்நாளில் மிகவும் விசேசமான ஒரு வழிபாடாகும் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு புத்தகத்தை எழுதி நிறைவு செய்தால் 5000 முறை நாமம் சொன்ன பலனும் 1 கோடி முறை சொன்னால் நினைத்த காரியம் அப்போதே கைக்கூடும் என்பது குறிப்பிட தக்கது.

இந்த நாம நூல் நாம் இறைவனுக்கு எழுதிய கடிதத்திற்கு ஒப்பானது எனவே இந்த புத்தகத்தைப் பூசை அறையில் வைத்து வழிபாடு செய்வது வர வர அதற்குறிய பலன்களை நீங்களே உணர்வீர்கள்.

🙏🏻கோபுர தரிசனம் கோடி புண்ணியம்🪔
🙏🏻கோடி நாம பெருவேள்வி
கோடான கோடி புண்ணியம்🪔

புத்தகம் கட்டண விபரம்:

ஒரு புத்தகத்தின் விலை: RM3.00
$1.50(Singapore dollars)
USD 1.50
£1.50

இயலாதோர்களுக்கு மளிகை உதவித் திட்டம்

தொடக்க விழா அழைப்பு


கருணை உள்ளம் கொண்டோர்களே

வணக்கம் வாழ்க லளமுடன்

ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும் ரூ750க்கு உரிய மளிகை சாமான்களை மாதாமாதம் வீட்டில் போய் கொடுத்து உதவும் திட்டம் 12.4.2023ல் உங்க உதவியுடன் காமதேனு அருளால் ஆரம்பமாகியது. புகழ்பெற்ற நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவி இந்நிகழ்வை படமாக்கி உலகிற்கே வழங்க வருகிறார்கள்.
எல்லோரும் வந்து உதிவி சிறப்பிக்க இரு கைகூப்பி வணங்கிக் கேட்டுக்கொள்கிறோம்
நன்றி.
மதியம் மூன்று மணிக்கு நிகழ்வு தொடங்கி மாலை ஏழு மணிக்கு முடியும்.
காப்பி சிற்றுண்டி வழங்கப்படும்.
வணக்கம்

இடம்: 66, Seen maena Veethii, Karaikudi.

Kamadhenu Chettinadu Charitable Trust State Bank of India, Sekkalai, Karaikudi
A/c No.00000041309084884
IFSC No.0070865

எங்கள் அறக்கட்டளை மூன்று ஆச்சிகளால் 4.7.2022 ல் காரைக்குடி Sub Registrar office ல் பதிவு செய்யப்பட்டு 16.10.2022 ல் சுமார் 24 ஏழை ஊனமுற்றவர்கள் – முதியவர்களுக்கும் தலா ரூ750க்கு ரேஷனில் தரப்படாத மளிகை பொருட்களும் மற்றும் ரூ200ம் தீபாவளிப் பரிசாக வழங்கி எளிமையாக எங்கள் காமதேனு திருவருளால் துவங்கப்பட்டது. சொல்லப்பட்ட ரூ200 காரைக்குடி எங்கள் வெ. மெ. குடும்பத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை கண்ணன் அவர்களால் வழங்கப்பட்டது. அந்த ஏழை அன்பர்களுக்கும் விருந்தினர்களுக்கும் உதவியாளர்களுக்கும் காலை பலகாரம் வழங்கப்பட்டது.